சென்னை அருகே விரைவு ரயிலில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

Published On:

| By christopher

சென்னையில் இருந்து இன்று (ஜூன் 22) மும்பை புறப்பட்ட விரைவு ரயில் பேசின் பாலம் ரயில் நிலையம் அருகே தீ விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி இன்று மாலை 6.20 மணிக்கு வழக்கம்போல புறப்பட்டு சென்றது லோக்மான்ய திலக் விரைவு ரயில்.

ADVERTISEMENT

சில நிமிடங்களில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அந்த விரைவு ரயில் என்ஜினின் பின்புறத்தில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த லோகோ பைலட், ரயிலை உடனடியாக நிறுத்தி வெளியேறினார்.

ADVERTISEMENT

சிறிது நேரத்தில் என்ஜின் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட பயணிகளும் ரயிலில் இருந்து பதறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

https://twitter.com/AnandAathiraa/status/1671881593634574336?s=20

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒருமணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

ADVERTISEMENT

முதற்கட்ட விசாரணையில்,  உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று ரயில்வே போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் உண்மையான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தீ அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட ரயில் என்ஜின் அகற்றப்பட்டு, புதிய என்ஜினுடன் லோக்மான்ய திலக் விரைவு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

கிறிஸ்டோபர் ஜெமா

எதிர்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்!

அனிதா சொத்துக் குவிப்பு வழக்கு: அமலாக்கத்துறை மனு என்னாச்சு? அமைச்சர்கள் வெயிட்டிங்…

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share