ஐ.பி.எல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. மார்ச் 23-ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிக்களுக்கிடையேயான ஆட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக, ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டுகள் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. WWW.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மார்ச் 19-ம் தேதி காலை 10.15 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. chennai-mumbai match ticket prize
இதற்கிடையே, பாகிஸ்தான் சூப்பர் லீக்கை முறித்து கொண்டு இந்தியன் சூப்பர் லீக் தொடரில் விளையாட தென்னாப்ரிக்க வீரர் கார்பின் பாஷ்க் முடிவு செய்துள்ளதால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த தொடர் பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதத்தில் முடிவடைந்து விடும். ஆனால், நடப்பாண்டில் இந்த தொடரை ஏப்ரல் மே மாதங்களில் நடத்துகிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி பி.எஸ்.எல். முடிவடைகிறது. இந்தியாவில் இதே காலக்கட்டத்தில் ஐ.பி.எல் மார்ச் 22ல் தொடங்கி மே 25 ஆம் தேதி முடிகிறது.Corbin Bosch chooses IPL over PSL
இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவார் ஷால்மி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டிருந்த தென்னாப்ரிக்க வீரர் கார்பின் பாஷ்க், பாகிஸ்தான் சூப்பர் லீக்கை புறக்கணித்துள்ளார். இவர், ஐ.பி.எல் லில் மும்பை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் காயமடைந்த லிசார்ட் வில்லியம்சுக்கு பதிலாக பாஷ்க் மும்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை அவர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.Corbin Bosch chooses IPL over PSL
கார்பின் பாஷ்க் நல்ல ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். இதற்கு, முன் 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கார்பின் நெட் பவுலராக இருந்தார். தற்போதுதான், முதன்முறையாக ஐ.பி.எல் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.chennai- mumbai match ticket prize