சென்னை மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி, பயணம் செய்த பயணிகளிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.4,71,600 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கிஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் 178(B) பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மாநகர் போக்குவரத்துக் கழகப் பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்புப் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இப்பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகபட்சமாக ரூ.500/- வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த ஜனவரி மாதத்தில் 4,223 நபர்களிடம் அபராத தொகையாக ரூ.4,71,600 வசூலிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜீவாவின் ‘டெஃப் ஃப்ராக்ஸ்’: பின்னணியில் ரஜினியின் குட்டிக்கதை!
”இதெல்லாம் துரோகம்” டிராவிட்டோடு சேர்த்து பிசிசிஐ வறுக்கும் ரசிகர்கள்!