சென்னை அடையாறு அருகே மாநகரப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 எண் வழித்தட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தானது பிராட்வேயில் இருந்து மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, அடையாறு, திருவான்மியூர், பெருங்குடி, சிறுசேரி வழியாக கேளம்பாக்கம் வரை செல்லும்.
இந்தநிலையில், இன்று (ஜூலை 2) மதியம் இந்த வழித்தடத்தில் சென்ற குளிர்சாதன வசதி கொண்ட மாநகரப்பேருந்து ஒன்று அடையாறு எல்.பி சாலை டெப்போ அருகே சென்றுகொண்டிருந்தபோது, கியர் பாக்சில் இருந்து புகை வந்துள்ளது.
உடனடியாக சுதாரித்த ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் பயணிகள் அனைவரையும் பேருந்தில் இருந்து வெளியேற்றினர். சிறிது நேரத்தில் பேருந்தானது மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். சென்னையில் மாநகர பேருந்து தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் தொடர்பாக பெருநகர சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ”
சென்னை பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு சென்று கொண்டிருந்த TN01 AN 1569 என்ற பதிவெண் கொண்ட CNG வகை பேருந்து அடையாறு எல்பி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, தீப்பற்றி எரிந்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாக தீ அணைக்கப்பட்டு, பேருந்து பாதுகாப்பாக டெப்போவிற்கு எடுத்து வரப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உத்தரபிரதேசத்தில் கோர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் பலியான சோகம்!