இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 17) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவை சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 8 மணி – 11 மணி மற்றும் மாலை 5 மணி – இரவு 8 மணி வரை 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
காலை 5 மணி – 8 மணி, காலை 11 மணி – மாலை 5 மணி, மற்றும் இரவு 8 மணி – 10 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயங்கும்.
இரவு 10 – 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாடப்புத்தகத்தில் பாபர் மசூதி பெயர் நீக்கம்: காங்கிரஸ் கண்டனம்!