நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று(அக்டோபர் 16) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை இடையே ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை, விமான நிலையம் – விம்கோ நகர் இடையே ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மற்றும் வாஷர்மேன் பேட்டை – ஆலந்தூர் இடையே ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாளை (அக்டோபர் 17) முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் வார நாள் அட்டவணையின் படி வழக்கம் போல் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி “காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).
காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:
பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை:
பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
இரவு 10 மணி முதல் 11 மணி வரை:
பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என்று எக்ஸ் தளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!
கடும் மழைக்கிடையே ஆவின் பால் விற்பனை படுஜோர்!
மீண்டும் ரெட் அலர்ட் ஏன்?: வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்!