சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது!

Published On:

| By christopher

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் தண்டவாளங்களை அமைக்க ரூ. 163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இன்று (ஜனவரி 11) கையெழுத்தாகியுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இரண்டாம் கட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைப்பதற்காக,

ADVERTISEMENT

ஜப்பானில் உள்ள மிட்சூ & கோ (Mitsui & Co.,) நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் மிட்சூ நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஹாஜிம் மியாகே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் இன்று (11.01.2023) கையெழுத்திட்டனர்.

ADVERTISEMENT

13885 மெட்ரிக் டன் எடையில் அமையவுள்ள இந்த தண்டவாளங்கள் சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் வழித்தடம் 4- ல் மாதவரம் முதல் சிஎம்பிடி வரை பயன்படுத்தப்படவுள்ளது.

சோதனை நடைமுறையுடன் கூடிய தண்டவாளங்களின் உற்பத்தி வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

ADVERTISEMENT

இவற்றினை 2025ம் ஆண்டுக்குள் மூன்று அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆளுநர் உரையில் அதிகளவில் பொய்யான தகவல் : அண்ணாமலை

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share