அதிகாலை 3 மணிக்கு மெட்ரோ: மாரத்தான் பங்கேற்பாளர்களுக்கு இலவசம்!

Published On:

| By Kavi

Chennai Metro Free Travel

சென்னையைச் சேர்ந்த ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் நிறுவனம், தி சென்னை ரன்னர்ஸ் அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, சென்னை மாரத்தான் நிகழ்வின் 12-வது பதிப்பை  நாளை (ஜனவரி 6) காலை 4 மணிக்கு சென்னையில் நடத்துகின்றன. Chennai Metro Free Travel

இந்த மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 6) மெட்ரோ ரயில் சேவைகள் அதிகாலை 3 மணி முதல் இயக்கப்படும் என்றும் மாரத்தான் பங்கேற்பாளர்கள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் QR குறியீடு போடப்பட்ட அட்டையைப் பயன்படுத்தி,

ADVERTISEMENT

6ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம்  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ADVERTISEMENT

சென்னை மாரத்தான் ஓட்டம் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4 மணி முதல் நடைபெறுகிறது.

இதையொட்டி மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் மற்றும் அவர்களுக்கு இடையூறு அற்ற எளிமையான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள், வருகின்ற (06.01.2024) அன்று அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

ADVERTISEMENT

மாரத்தான் பங்கேற்பாளர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து, மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சிறப்பு க்யூஆர் குறியீடு பதியப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி,

06.01.2024 அன்று மட்டும் மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி பயணம் செய்து கொள்ளலாம் மற்றும் இந்த க்யூஆர் குறியீட்டை  பயன்படுத்தி பங்கேற்பாளர்களுக்கு அன்று மட்டும் வாகன நிறுத்துமிடத்தில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம்.

வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் காலை 5.00 மணி முதல் இயக்கப்படும். மாரத்தான் பங்கேற்பாளர்கள் முழுமையாக இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: ஹேர்  கலர்… ப்ளீஸ் கேர்!

கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!

திருப்பு முனையா கேக்குறே திருப்பு முனை… அப்டேட் குமாரு

Chennai Metro Free Travel

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share