ஆறுபோல் காட்சியளிக்கும் சுரங்கப்பாதைகள்!

Published On:

| By Balaji

சென்னையில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை நிரம்பி ஆறுகளில் வெள்ளம் அடித்துச் செல்வது போல காட்சியளிக்கிறது.

சென்னையில் விடிய, விடிய கொட்டிய மழையால் மாநகரில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளும் நீரில் மூழ்கின. எனவே, சுரங்கப்பாதைகளிலிருந்து மழை நீரை வெளியேற்றி வருகிறது சென்னை மாநகராட்சி.

ADVERTISEMENT

குறிப்பாக தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதையிலிருந்த மழைநீர் அகற்றப்பட்டு நேற்று தான் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக மீண்டும் அந்த சுரங்கப்பாதையில் மழைநீர் ஆற்றில் தண்ணீர் திறந்துவிட்டது போல் ஓடுகிறது.

இதனால்,தி.நகர் பசுல்லா சாலை, ஜிஎன் செட்டிசாலை முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாதுகாப்பு கருதி மேட்லி சுரங்கப்பாதையில் இன்று போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

*T. Nagar – Madly Subway* pic.twitter.com/1hA9x4434n

— I Am Pavanz Sharma (@PavanSharma1806) November 11, 2021

சுரங்கப்பாதைகளில் நீர் நிரம்பி நிற்பதை அப்பகுதிவாசிகள் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

**கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை**

ADVERTISEMENT

**அரங்கநாதன் சுரங்கப்பாதை**

**பழவந்தாங்கல்**

இதுபோன்று சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மழை நீரால் மூழ்கியுள்ளன.

**-பிரியா**

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share