சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

Published On:

| By Minnambalam

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர், வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு,

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து நாளை (அக்டோபர்.28) தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாமை நடத்த  உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை – 32 கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள,

ADVERTISEMENT

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில்  8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு,  12ஆம் வகுப்பு,  ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல்,

ADVERTISEMENT

மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இந்த முகாமில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்கள்.

-ராஜ்

உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை: இந்தியர்கள் வெளியேற மீண்டும் அறிவுறுத்தல்!

கிச்சன் கீர்த்தனா – வரகு சீப்பு சீடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share