தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது. chennai imd heat increase in 2 days
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று (மார்ச் 9) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 38.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 38° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 35° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2-3° செல்சியஸ் அதிகரிக்கும்! chennai imd heat increase in 2 days
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதே வேளையில் நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்! chennai imd heat increase in 2 days
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 34″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.