சவுக்கு சங்கர் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு பரிந்துரைத்துள்ளது
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது தாயார் கமலா சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று (ஜூலை 26) நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இம்மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது யூடியூப் பேட்டிகளில் சவுக்கு சங்கர் பேசும் பேச்சுகள் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் அரசுக்கு சவால் விடும் அளவுக்கு அவர் பேசியதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘ஏற்கனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரித்து காவல்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் தாக்கல் செய்த மனுவில் இந்த அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கபட்டுள்ளது.
இனி இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க விரும்பவில்லை. விசாரிப்பது சரியாக இருக்காது என்று கருதுகிறோம்.
எனவே வேறு ஒரு அமர்விற்கு இவ்வழக்கை மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்” என்று கூறினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அக்னிபத் திட்டத்தை அரசியல் ஆக்குகின்றனர்: கார்கிலில் மோடி பேச்சு!
Paris Olympics 2024: வில்வித்தையில் மிரட்டிய இந்திய வீரர், வீராங்கனைகள்!