சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். chennai high court cheif judge transfered
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக பணியாற்றிய கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இந்தநிலையில் அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்தநிலையில் அவரை ராஜஸ்தானுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். chennai high court cheif judge transfered
மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, பாட்னா, ஜார்காண்ட், திரிபுரா, தெலங்கான உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
