சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் எல்.சி.விக்டோரியா கௌரி, பி பி பாலாஜி, கே.கே ராமகிருஷ்ணன், ஆர் கலைமதி, கே.ஜி திலகவதி ஆகிய ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஜாமீன் மனு தள்ளுபடி… மகாவிஷ்ணு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
நாயுடு Vs ஜெகன்மோகன்: அரசியல் குண்டாக மாறிய திருப்பதி லட்டு!