சென்னையில் இன்று(அக்டோபர் 30) காலை முதல் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில திங்களாக இரவு நேரங்களில் சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென தி.நகர், கோடம்பாக்கம், அசோக் நகர், அண்ணாநகர், அமைந்தகரை, கொளத்தூர், பெரம்பூர், மணலி, நெற்குன்றம், பாடி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை சில மணி நேரத்தில் கொட்டித்தீர்த்தது.
இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நாளை தீபாவளி அன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று (30.10.2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தீபாவளியான நாளை திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கங்குவா பட எடிட்டர் திடீர் மரணம்… என்ன நடந்தது?
“ஒரே ஆண்டில் இரு தேர்தலில் வென்றவர் முத்துராமலிங்க தேவர்: பசும்பொன்னில் எடப்பாடி மரியாதை!
ஆர்.சி.பி அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டன்? அடுத்தடுத்து ட்விஸ்ட்!