தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த ஆண்டு முதல்முறையாக சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த நிலையில், இரண்டாவது ஆண்டாக சென்னையில், கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்று நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி முதல் நவம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் மொத்தம் 7 சுற்றுகளாக ரவுண்டு ராபின் முறையில் இந்த போட்டி நடைபெறுகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மொத்தம் 1100 இருக்கைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 கிராண்ட் மாஸ்டர்கள் களமிறங்குகின்றனர்.
வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.50 லட்சம் பரிசளிக்கப்பட உள்ளது. முதல் பரிசாக ரூ. 15 லட்சம் அளிக்கப்படும். தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் , அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். சாம்பியன் பட்டம் பெறும் வீரருக்கு 24.5 சர்வதேச தரவரிசைப் புள்ளிகள் கிடைக்கும். இதில், வெற்றி பெறுபவர்கள் 2026 கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன், முதல் முறையாக சேலஞ்சர்ஸ் போட்டியும் நடைபெற உள்ளது. இதுவும் 7 சுற்றுகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ20 லட்சம் அகும். முதல் பரிசு ரூ6 லட்சம். வைஷாலி ரமேஷ்பாபு, கார்த்திகேயன் முரளி, பிரணவ் வெங்கடேஷ், பிரணேஷ் முனிரத்தினம் உட்பட8 பேர் கலந்து கொள்கின்றனர். இதில் சாம்பியன் பட்டம் பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம்.
போட்டியை காண பொதுமக்கள், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். நுழைவுக் கட்டணம் ரூ100 ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
குத்துச்சண்டை வீராங்கனை இமானுக்கு விதைப்பை… கர்ப்பப்பை இல்லை…பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
இன்ஸ்டாவில் ஐஸ்வர்யாராய் பின்தொடரும் ஒரே நபர்… யார் தெரியுமா?