வரும் ஏப்ரல் 30-ம் தேதி அக்ஷய திருதியை வரும் நிலையில் மக்கள் நகை வாங்க தயாராகி வருகின்றனர். Chennai Gold Silver Rate Today
இந்த நிலையில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு 1280 ரூபாய் குறைந்தது. கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனை செய்யப்பட்டது
இந்த நிலையில் 3வது நாளாக இன்றும் (ஏப்ரல் 7)தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தங்கம் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து 8,285 ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் குறைந்து 66,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.