போதை ஜோடியின் ஆபாச அட்ராசிட்டி.. கைதுக்கு பின் போலீசிடம் மன்னிப்பு!

Published On:

| By Selvam

சென்னை பட்டினப்பாக்கத்தில் மதுபோதையில் போலீசாரிடம் ஆபாசமாக பேசிய சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் இன்று (அக்டோபர் 21) கைது செய்தனர்.

சென்னை மெரினா கடற்கரை பட்டினப்பாக்கம் அருகே மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு (அக்டோபர் 21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை போலீசார் எடுக்க வலியுறுத்தினர்.

உடனடியாக காருக்குள் இருந்து வெளியே வந்த ஒரு ஆணும் பெண்ணும், காவலர்களிடம் ஆபாசமாக பேசினர். “எங்களை உங்களால் ஒன்னும் செய்ய முடியாது. உதயநிதி ஸ்டாலினை எங்களுக்கு தெரியும். மதுபோதையில் தான் இருக்கிறேன். முடிந்தால் கைது செய்யுங்கள். நாளை உங்களை அட்ரஸ் இல்லாத இடத்திற்கு மாற்றிவிடுவோம்” என்று மிகவும் மிரட்டும் தொனியில் இருவரும் பேசினர்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் காவலர்களை மிரட்டும் தொனியில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்தநிலையில், காவலர் சிலம்பரசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வேளச்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலெட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

இருவரையும் மயிலாப்பூர் துணை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சந்திரமோகன் போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவை சென்னை காவல்துறை  இன்று எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், “என் பேரு சந்திரமோகன். நான் வேளச்சேரியில இருந்து வர்றேன். நேத்து நைட்டு 12.30 மணிக்கு பட்டினப்பாக்கம் பீச் பக்கத்துல நான் என் தோழியும் சாப்பிடுறதுக்காக நின்னுக்கிட்டு இருந்தோம்.

ஓவர் போதையில  போலீஸ்கிட்ட வாக்குவாதம் பண்ணி அவங்கள ஆபாசமா கெட்டவார்த்தை பேசி திட்ட ஆரம்பிச்சிட்டேன். இனி  ஒருபோதும் போலீச ஆபாசமா பேச மாட்டேன். என்னை மன்னிச்சிருங்க” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஏர் இந்தியாவில் சீக்கியர்கள் பயணிக்க வேண்டாம்- காலிஸ்தான் தீவிரவாதி கோரிக்கை வைத்த பின்னணி!

தங்கலான் ஓடிடி ரிலீஸ்… க்ரீன் சிக்னல் கொடுத்த கோர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share