சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள்: உரிமையாளர் கைது!

Published On:

| By Selvam

சென்னையில் ஐந்து வயது சிறுமியை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக ரகு பணியாற்றி வருகிறார். இவர் பூங்காவில் உள்ள ஒரு சிறிய அறையில் தனது மனைவி சோனியா மற்றும் மகள் சுதக்‌ஷா (வயது 5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில், தனது உறவினர் ஒருவர் இறந்ததால் ரகு நேற்று (மே 5) விழுப்புரம் சென்றார். மனைவி சோனியா, மகள் சுதக்‌ஷா ஆகிய இருவரும் பூங்காவில் இருந்தனர்.

மாலையில் அதே பகுதியில் வசிக்கக்கூடிய புகழேந்தி தங்கள் வீட்டில் உள்ள இரண்டு ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களை பூங்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

சுதக்‌ஷா பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு நாய்களும் அவரை கடித்துக் குதறியுள்ளது. இதனையடுத்து வலி தாங்காமல் சுதக்‌ஷா அலறினார். உடனடியாக பூங்காவில் இருந்தவர்கள் நாயை விரட்டினர்.

இதனை தொடர்ந்து சுதக்‌ஷாவை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறுமிக்கான மருத்துவ செலவை தானே ஏற்றுக்கொள்வதாக நாயின் உரிமையாளர் புகழேந்தி தெரிவித்ததையடுத்து, சுதக்‌ஷா ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆயிரம் விளக்கு போலீசார், நாயின் உரிமையாளர் புகழேந்தியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சென்னையில், ஐந்து வயது சிறுமியை நாய்கள் கடித்து குதறியுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளஸ் 2 ரிசல்ட்: 94.56% மாணவர்கள் தேர்ச்சி!

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share