தமிழகத்தில் ரமலான் நோன்பு நாளை (மார்ச் 2) முதல் தொடங்கும் நிலையில், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த அலுவலர்களுக்காக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. chennai corporation ramadan announcement
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் நோன்பு இருப்பார்கள். இந்தியாவில் இந்த பிறை தெரியாத நிலையில், ரமலான் மாதம் மார்ச் 2ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்றே பிறை தெரிந்த நிலையில், மார்ச் 1ம் தேதி முதலே ரமலான் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் கருதப்படுகிறது. ரமலான் மாத நோன்பும், மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையும் பிறையின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்.
அதன்படி ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை தென்பட்டதால் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் நேற்றிரவு முதல் தொழுகையைத் தொடங்கினர். இன்றுமுதல் நோன்பிருக்க உள்ளனர்.
இந்தியாவில் ரமலான் நோன்பு எப்போது? chennai corporation ramadan announcement
அதே வேளையில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற பிற நாடுகளில் நேற்று பிறை தெரியவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகம்மது அய்யூப் வெளியிட்ட அறிவிப்பில், “ஹிஜ்ரி 1446 ஷாபான்மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28 – 02-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 02-03-2025ம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-03-2025 வியாழக்கிழமை மற்றும் 28-03-2025 வெள்ளிக்கிழமை ஆகிய இருநாட்களின் மத்தியிலும் இரவில் ஆகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் முன்னதாக செல்ல அனுமதி! chennai corporation ramadan announcement
இந்த அறிவிப்பை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு நேற்று வெளியானது.
அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற எதுவாக வருகின்ற 02-03-2025 முதல் 31-03-2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.