மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.1,800 கோடி வரி வசூல்: சென்னை மாநகராட்சியின் அதிரடி திட்டம்!

Published On:

| By christopher

சொத்து வரி செலுத்துபவர்களிடமிருந்து வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிரடி திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பாக சொத்து வரி செலுத்தும் 5.13 லட்சம் பேருக்கு இந்த மாதம் 30-ம் தேதிக்குள் வரியை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும், கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த பெயர் பட்டியலை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதிக்கு முன்பே சுமார் 40,000 பேர் முன்கூட்டியே ஆன்லைனில் வரியைச் செலுத்தினார். 6 சதவிகித வரி உயர்வுக்கு பிறகு இந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக, சொத்து வரி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரி செலுத்துவதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5 சதவிகித ஊக்கத்தொகை சலுகை கிடைக்கும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்: பிரதமர் அளித்த பதில்!

ஆரியம் ஏன் இன்று “தமிழ் வேண்டும், திராவிடம் வேண்டாம்” என்று சொல்கிறது?

டாப் 10 நியூஸ் : உருவாகும் புதிய காற்றழுத்தம் முதல் கங்குவா 2வது சிங்கிள் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : ராகி சீவல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share