ரூ.20 கோடி செலவில் சென்னை மாநகராட்சியின்  ‘ஃபுட் ஸ்ட்ரீட்’!

Published On:

| By Selvam

சென்னையில் பல்வேறு இடங்களில்  ஃபுட் கோர்ட்டுகளும் ஃபுட் ஸ்ட்ரீட்டுகளும் இயங்குகின்றன.

அங்குள்ள கடைகளில் தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், சைனீஸ் உணவுகள் என்று அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கின்றன.  ஆனால், இந்த உணவகங்களில் இன்று பலரால் விரும்பப்படும் தெருவோரத்தில் மலிவான விலையில் கிடைக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபுட்’ என்று அழைக்கப்படும் தெருவோர உணவுகள் கிடைப்பதில்லை. மேலும், சென்னையில் ஸ்ட்ரீட் ஃபுட் உணவுத் திருவிழாக்களை நடத்துவதற்கு சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லை.

இந்த நிலையில், சென்னையில் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சின்னமலை அருகில் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து ராஜ்பவன் சாலை வரை உள்ள 2 கி.மீ நீளச் சாலையை உணவுச் சாலையாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.20 கோடி செலவில் இந்த உணவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.

இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகள், “சென்னையில் உள்ள அனைத்து பிரபலமான உணவு வகைகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று ஒரு திட்டத்தைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தச் சாலையில் இரண்டு புறமும் நடைபாதைகள் பெரிதாக அமைக்கப்படும். மேலும், அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

இதன் பிறகு சென்னையில் பிரபலமாக உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து உணவகங்களையும் இங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் உணவு திருவிழாக்கள் நடத்த ஏற்ற இடமாக இது இருக்கும். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்றது. விரைவில் இந்தப் பணிகள் இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்” என்று உறுதியளித்துள்ளனர்.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தினை – தக்காளி வற்றல்

பயிற்சி இல்லாதவர்களுக்கு போர்: தப்பியோடும் இளைஞர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share