இன்று (டிசம்பர் 10) காலை 7.30 மணியில் இருந்து வேளச்சேரி – கடற்கரை வரை செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் காரணமாக நேற்று (டிசம்பர் 9) முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. தொடர்ந்து இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் மாண்டஸ் முழுவதுமாக கரையைக் கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்று வீசியதில் பல இடங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அநேக இடங்களில் மரங்கள் வேருடனும் மரக்கிளைகள் முறிந்து விழுந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனைச் சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளச்சேரி – கடற்கரை வரை செல்லும் ரயில்கள் காலை 7.30 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் மின் இணைப்பைச் சீர் அமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மோனிஷா
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: விமர்சனம்!
உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ஜென்டினா