சென்னையில் அடுத்தடுத்து செயின் பறிப்பு… என்கவுன்டரில் ஒருவர் பலி!

Published On:

| By Selvam

சென்னையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜாபரை போலீசார் இன்று (மார்ச் 26) அதிகாலை என்கவுன்டர் செய்தனர். Chennai chain snatch police

தலைநகர் சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஆறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜாபர் குலாம் ஹுசைன், சூரஜ் ஆகிய இரண்டு வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை சென்னை தரமணியில் வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது தரமணி ரயில் நிலையம் அருகே ஜாபர் போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதாகவும், இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஜாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் என்கவுன்டரில் பலியான ஜாபர் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுன்டர் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Chennai chain snatch police

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share