சென்னை அரும்பாக்கத்தில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்து மோதியதால் 50 வயது நபர் உயிரிழந்தார். Chennai Bus Driver Suffers Sudden Heart Attack
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி இன்று ஜூலை 13-ந் தேதி மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் மாநகரப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 50 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
