சென்னை கடற்கரை – வேளச்சேரி: நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை!

Published On:

| By Selvam

Chennai Beach Velachery Flying Train

இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வேளச்சேரி முதல் சென்னை கடற்கரைக்கு பறக்கும் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடம் முக்கியமான வழித் தடத்தில் ஒன்றாக உள்ளது.

இந்த வழித் தடத்தில் உள்ள ரயில் நிலையங்களை ஒட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், இந்த வழித்தடத்தில் ஓடும் மின்சார ரயில்கள் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பு வரை, இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.

இதற்கிடையில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.2 கி.மீ தொலைவுக்கு நான்காவது பாதை அமைக்கும் பணி காரணமாக, கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரையிலான ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பார்க் மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் தரையிறங்குவது தொடர்பான  சிக்கல்கள் இருந்த நிலையில், தற்போது பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. குடிமராமத்து பணிகள், நடைமேடைகள் அமைத்தல் போன்ற ஒரு சில பணிகள் மட்டுமே உள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மேலும், எழும்பூரில் இருந்து கடற்கரை வரையிலான நான்காவது பாதை திட்டப் பணிகளும் நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : ரத்தன் டாடா மறைவு முதல் வேட்டையன் ரிலீஸ் வரை!

விடைபெற்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா

சிதம்பரம் கோவில் கிரிக்கெட் பிரச்சனை… தீட்சிதர் விளக்கம்!

’‘அனிமல் ‘ படத்தால் நிறைய அழுதேன் ‘ : நடிகை திருப்தி டிமிரி

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு : ஸ்டாலினை சந்திக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!

’ஒரு நிமிடத்தால் விருது பறிபோனது ‘ – ஏ.ஆர்.ரகுமான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share