செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையானது புறநகர் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாள் தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்காணோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தசூழலில், செங்கல்பட்டு – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் தாம்பரம் – பல்லாவரம் இடையே ரயில் சேவை இயக்கப்படுவதில்லை.
இந்தநிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவம்பர் 22) முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 14 ரயில்கள் மற்றும் தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் 14 ரயில்கள் என 28 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரத்து செய்யப்படும் ரயில் அட்டவணை!
புதிய ரயில் அட்டவணை!
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வனத்துறையில் பணி!
அதானியுடன் தமிழக அரசு ஒப்பந்தமா? – வெள்ளை அறிக்கை கேட்கும் பிரேமலதா