சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பலாத்கார வழக்கு- மே 28-ல் தீர்ப்பு

Published On:

| By Minnambalam Desk

Anna University

சென்னை அண்ணா பல்க லைக் கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மே 28-ந் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது. Anna University Student Rape Case

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த விவகாரத்தில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கை சென்னை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே 28-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. 5 மாதங்களில் இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share