சென்னை அண்ணா சாலையில் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்!

Published On:

| By Selvam

chennai anna salai happy street show

சென்னை அண்ணா சாலையில் இன்று (ஆகஸ்ட் 27) ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகரில் வசிக்கும் மக்களின் மன அழுத்தத்தை போக்கவும் வார விடுமுறையை கொண்டாடவும் நகரின் பல பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்புகள் ஒருங்கிணைக்கின்றன.

ADVERTISEMENT

அந்தவகையில் இந்த வாரம் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜிபி சாலை வரையிலான பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் டேபிள் டென்னிஸ், ஸ்கேட்டிங், பலூன் ஊதுதல், சிலம்பம், டாக் ஷோ போன்ற விளையாட்டுக்களும் நடைபெற்றது.

ADVERTISEMENT

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுபவரா நீங்கள்?

ADVERTISEMENT

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share