சம்மர் ஸ்பெஷல் விமானங்கள் : இனி ஜாலியாக பறக்கலாம்!

Published On:

| By Kavi

chennai airport summer special fights

கோடை விடுமுறையை முன்னிட்டு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. chennai airport summer special fights

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மக்கள் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லவும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று விடுமுறையை கொண்டாடவும் தயாராகி வருகின்றனர்.

இந்தசூழலில் சென்னை விமான நிலையம், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. கோடை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 206 சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. chennai airport summer special fights

”சம்மர் ஸ்பெஷல்” திட்டத்தின் கீழ் 42 சர்வதேச விமானங்களும் 164 உள்நாட்டு விமானங்களும் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 50,000 ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கை தற்போது 55000 முதல் 60000 வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சென்னை-இலங்கை இடையே ஏர் இந்தியா நிறுவனம் வாரம் 7 விமானங்களை இயக்கி வந்த நிலையில் 10ஆக அதிகரித்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானமும் வாரத்துக்கு 7 விமானங்களை இயக்கவுள்ளது.

அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், யாழ்ப்பாணத்திற்கு 7 வாராந்திர விமான பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் குவைத்துக்கு வாரம்தோறும் 5 விமானங்களை இயக்கி வந்தநிலையில் தற்போது 7ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. chennai airport summer special fights chennai airport summer special fights

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share