அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிப்பு!

Published On:

| By christopher

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வர உள்ள நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

அதே கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி – பன்னீர் தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சி அலுவலகமும் சூறையாடப்பட்டது. போலீசார் உட்பட 40க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்னும் சில மணி நேரத்தில் இன்று வழங்கப்பட உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தற்போது போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் தலைமை அலுவலகம் இருக்கக் கூடிய அவ்வை சண்முகம் சாலையில் தடுப்பு வேலிகளுடன் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

மோசமான ஓட்டுநர்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா

டாப் 25 பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி குழுமம்: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share