செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Published On:

| By Jegadeesh

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இதனால், டிசம்பர் 12 மற்றும் டிசம்பர் 13 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chengalpattu and Kanchipuram schools have a holiday tomorrow

இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிசம்பர் 13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமர்

பிரதமர் மோடியை கொல்லுங்கள் – காங்கிரஸ் பிரமுகர் சர்ச்சை பேச்சு!

ராகிங் கொடுமை: மாறுவேடத்தில் சென்ற போலீஸ்..சிக்கிய மாணவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share