நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஜனநாயகன்” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அனிருத் இசையில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “ஜனநாயகன்” திரைப்படம், விஜய்யின் கடைசி படமாகும். இதனால் ஜனநாயகன் படத்தில் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் பிரம்மாண்டமாக மலேசியாவில் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழ் சினிமா பிரபலங்கள் மலேசியாவில் குவிந்து வருகின்றனர்.
இந்தசூழலில் விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட்டாக ஜனநாயகன் படத்தின் மூன்றாவது சிங்கிளை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
“செல்ல மகளே…” எனத் தொடங்கும் இந்தப் பாடலை விஜய் தானே பாடியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் பாடல், படத்தின் கதையில் ஒரு முக்கியமான உணர்ச்சிப்பூர்வமான திருப்பமாக இருக்கும் என கருதப்படுகிறது.
முன்னதாக வெளியான ‘தளபதி கச்சேஎரி ‘ மற்றும் ‘ஒரு பேரே வரலாறு’ போன்ற அதிரடிப் பாடல்களைத் தொடர்ந்து, இன்று வெளியாகியிருக்கும் மெலோடி பாடலுக்கு விஜர் ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நாளை மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
