ADVERTISEMENT

ரிலாக்ஸ் டைம்: சீஸ் அவல்!

Published On:

| By Balaji

ஒரே நேரத்தில் அதிக அளவு உணவு அல்லது சத்தற்ற உணவைச் சாப்பிடுவதை விட பழங்கள், சுண்டல் போன்றவற்றை ஸ்நாக்ஸ் முறையில் சாப்பிடலாம். அதற்கு இந்த சீஸ் அவல் உதவும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

**எப்படிச் செய்வது?**

ADVERTISEMENT

வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடாக்கி, 200 கிராம் அவலைப் போட்டு பொரித்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டேபிள்ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து 50 கிராம் சீஸைத் துருவிக் கலந்து பரிமாறவும்.

**சிறப்பு**

ADVERTISEMENT

சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகளைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பசிக்கிறது என்று நச்சரிக்கும் குழந்தைகளுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த சீஸ் அவல்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share