வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள இருப்பை ஒரு நாளைக்கு 50 முறை சரிபார்க்க முடியும் என தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. check balance of the bank account is limit: NPCI
நாட்டின் பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் இன்று யுபிஐ மூலமாக தான் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் தாக்கம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகள் முதல் நகரங்களில் உள்ள பெரிய மால்கள் வரையும் அதிகம் காணப்படுகிறது.
இந்த நிலையில் செல்போன்கள் மூலமாக செய்யப்படும் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறைகளை தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் யு.பி.ஐ. பரிவர்த்தனை நிலையைச் சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனை ரத்து போன்றவற்றுக்கான பதிலளிப்பு நேரம் (Response time) 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அக்கவுண்ட் ஐடிக்களை சரிபார்க்கும் பதிலளிப்பு நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ ஐடியில் இருந்து வங்கி கணக்கில் உள்ள இருப்பை ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
இந்த புதிய விதிமுறைகளின் மூலம் நெட்வொர்க்கில் தேவையற்ற சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும் எனவும், யுபிஐ மூலமான பணப் பரிவர்த்தனை இனி வேகமாக இருக்கும் எனவும் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் தெரிவித்துள்ளது.