கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் கோவை வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“கண்ணூரிலிருந்து காலை 06:00 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16607 ) ஆகஸ்ட் 22 மற்றும் 26, 2025 தேதிகளில் பாலக்காடு ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு ஜங்ஷனிலிருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படாது.
இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு (ரயில் எண் 66615), ஆகஸ்ட் 22 மற்றும் 26, 2025 தேதிகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும். கோயம்புத்தூரிலிருந்து போத்தனூர் வரை இயக்கப்படாது.
இதேபோல் கோயம்புத்தூர் – மதுரை எக்ஸ்பிரஸ் (எண் 16721) கோயம்புத்தூர் ஜங்ஷனிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக வரும் ஆகஸ்ட் 22 மற்றும் 26, 2025 தேதிகளில் பொள்ளாச்சி ஜங்ஷனிலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படாது./ பொள்ளாச்சி ஜங்ஷனிலிருந்து மதுரை வரை இயக்கப்படும்.
போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு (எண் 66616) போத்தனூரிலிருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஆகஸ்ட் 22 மற்றும் 26, 2025 தேதிகளில் கோயம்புத்தூர் ஜங்ஷனிலிருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் போத்தனூரிலிருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படாது. கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை மட்டும் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
