பயணிகள் கவனத்திற்கு : கோவை வழியே இயக்கப்படும் ரயில்களில் மாற்றம்!

Published On:

| By Kavi

கோவை வடக்கு ரயில் நிலையத்தில் பாதை புதுப்பிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் 8 ஆகஸ்ட் 2025 அன்று சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

குறிப்பாக சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சில ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு (ரயில் எண்:66615) மேட்டுப்பாளையத்திலிருந்து பிற்பகல் 1:05 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 08.08.2025 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு (ரயில் எண் 66616) போத்தனூர் சந்திப்பிலிருந்து பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 08.08.2025 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள்

ADVERTISEMENT

இதேபோல் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12675) சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 08.08.2025 அன்று இருகூர் – போத்தனூர் வழித்தடம் வழியாக இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தில் நிற்பதற்கு மாற்றாக, போத்தனூர் சந்திப்பில் நிற்கும்.

சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12243) சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7:15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 08.08.2025 அன்று இருகூர் – போத்தனூர் வழித்தடம் வழியாக இயக்கப்படும். கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தில் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. அதுற்கு மாற்றாக போத்தனூர் சந்திப்பில் நிறுத்தப்படும்.

இதேபோல் எர்ணாகுளம் – கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12678) எர்ணாகுளத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்படும். இந்த ரயில், 08.08.2025 அன்று போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதேசமயம் கோயம்புத்தூர் சந்திப்பில் ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக போத்தனூர் சந்திப்பில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share