தண்டவாள பராமரிப்புப் பணி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இன்று (அக்டோபர்18) வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 20.10.2025 முதல் 24.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
இதனால் 20.10.2025 முதல் 24.10.2025 வரை ரயில் சேவை மாற்றியமைக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில்கள் காலை 05:00 மணி முதல் 06:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
காலை 06:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று தீபாவளி விடுமுறையை முன்னிட்டும் மெட்ரோ ரயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வரும் 20ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.
21ஆம் தேதி பீக் ஹவரில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், நான் பீக் ஹவரில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், இரவு 10 மணி முதல் 11 வரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
