உப்புமாவுக்கு பதில் பொங்கல் : காலை உணவுத் திட்டத்தில் மாற்றம்!

Published On:

| By Kavi

change in kalai unavu thitam

பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவுத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. change in kalai unavu thitam

தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்ரல் 16) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதாஜீவன், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

“பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல், சாம்பார் வரும் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும். 

காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்து, குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளனர்.

சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியம் ரூ.61 கோடியாக உயர்த்தப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள், புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படும்.

சென்னை, மதுரையில் திருநங்கைகளுக்கு அரண் என்னும் தங்கும் மையம் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

புதுமைப் பெண் திட்டத்துக்கு இதுவரை ரூ.721 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு எடை குறைவாக இருந்த 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்தார் அமைச்சர் கீதா ஜீவன். change in kalai unavu thitam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share