தலைமைச் செயலகத்தை மாற்றுங்கள்: முதல்வருக்கு கோரிக்கை!

Published On:

| By Minnambalam

Change Headquarters Staff Demand

தமிழகத்தின் தலைமைச் செயலகமாக தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சிகாலத்தில் (2006-2011 )அண்ணாசாலையில் அரசினர் தோட்டம் அருகே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு திமுக அரசால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை அரசினர் பன்னோக்கு உயர் மருத்துவமனையாக மாற்றியதோடு, பழையபடி ஜார்ஜ் கோட்டைக்கே தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மாற்றினார்.

ADVERTISEMENT

அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் ஜார்ஜ் கோட்டையிலேயே முக்கிய செயலாளர்களின் அலுவலகங்கள் அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறலாம் என்ற பேச்சுகள் எழுந்தன.

ADVERTISEMENT

மேலும், தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் ஓமந்தூரார் மருத்துவமனையை மீண்டும் தலைமை செயலகமாக மாற்ற வேண்டும் என்று ஆளும் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அது மருத்துவமனையாகவே தொடரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தலைமைச் செயலக விவகாரம் தொடர்பாக முதல்வருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தினர் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 30) கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், “தலைமைச் செயலகத்தில் இடநெருக்கடி என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. குறிப்பாக தலைமைச் செயலகத்தின் பழைய கட்டடத்தில் பணியாளர்கள் எளிதாக நடமாட முடியாத சூழல் உள்ளது.

தீ விபத்து ஏற்பட்டால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படும் அபாயகரமான சூழல்தான் உள்ளது. பணியாளர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதும் பெரிய பிரச்னையாக உள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் அனைத்து தளங்களிலும் நடுவில் மாற்றுத் திறனாளிகளின் கழிவறை அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து அசுத்தக் காற்று வெளியேற வழி இல்லாததால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், 234 சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து சட்டமன்றக் கூட்டத்தினை நடத்துவதற்கான இடவசதி என்பதும் சவாலாகவே உள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் சட்ட மேலவை அமைக்கப்பட்டால் அதற்கான இட வசதி என்பதும் இயலாத காரியமாக உள்ளது.

போதிய இட வசதி இல்லாததால் அமைச்சர்களால் துறை ரீதியான கூட்டங்கள் நடத்துவது சிரமமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டுதான் கலைஞர் ஓமந்தூரர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்தை கட்டினார் என்றும் கடுமையாக இடநெருக்கடியோடு பல்வேறு இடர்பாடுகளை பல ஆண்டுகளாக சந்தித்து வரும் தலைமைச் செயலகப் பணியாளர்களின் இடரினை போக்க தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலக வளாகம் இடமாற்றம் அல்லது புதியதாக தலைமை செயலகம் அமைத்தல் குறித்த அரசின் கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”ஜவான் படம் உருவாக காரணம் விஜய் தான்”- அட்லி

பிரதமர் பதவி யாருக்கு?: இந்தியா கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share