ஈஷாவில் வீரமுத்துவேல்

Published On:

| By Kavi

சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் ஈஷா யோகா மையத்துக்கு சென்று தேவி கோயிலில் வழிபட்டுள்ளார்.

நிலவில் கால் பதிக்கும் இந்தியாவின் கனவை சந்திரயான் 3 திட்டம் நிறைவேற்றியிருக்கிறது. ஆகஸ்ட் 23ஆம் தேதி இஸ்ரோ திட்டமிட்டப்படி, சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிரங்கியது.

தற்போது ரோவர் நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த சாதனைக்கு முக்கியமானவர் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல்,
இந்த வெற்றி பயணத்தை தொடர்ந்து வீரமுத்துவேல் இன்று (ஆகஸ்ட் 23) ஈஷா யோக மையத்துக்கு சென்றுள்ளார்.

மதியம் 12.30 மணிக்கு சென்ற வீரமுத்துவேல், ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோயில் அபிஷேகத்தில் சத்குருவுடன் கலந்துகொண்டார். சந்திரயான்-3 லேண்டரை நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபாடு செய்தார் வீரமுத்துவேல்.

தொடர்ந்து  வீரமுத்துவேலுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து பரிசு வழங்கினார் சத்குரு, அதுபோன்று சந்திராயன் 3-ன் லேண்டர், ரோவர் மினியேச்சரை வீரமுத்துவேல் பரிசாக வழங்கினார்.

தனது விண்வெளி மற்றும் ஆன்மீக பயணம் குறித்து வீரமுத்துவேல் கூறுகையில், “2009ல் எனது நண்பர் ஒருவர் மூலம் சத்குருவை தெரிந்துகொண்டேன். ஒரு மகா சிவாரத்திரி அன்று என்னை ஈஷாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்து வந்தார். நள்ளிரவு தியானத்தில் பங்கேற்றேன். 7 நாள் எடுத்துக்கொண்ட பயிற்சியில் எனக்குள் நிறைய மாற்றங்களை உணர முடிந்தது.

அதுபோன்று ஈஷா யோகா மையத்துக்கு என் மனைவியுடன் வந்து சத்குருவை சந்தித்தேன். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய அவரிடம் ஆசியையும் நல்வாழ்த்துக்களையும் பெற்றேன்.

இந்த திட்டம் பற்றி அவரிடம் கலந்துரையாடினேன். சத்குருவிடம் வானவியலை பற்றி நன்கு கேட்பேன். அதன்மூலம் எனக்கு பல யோசனைகள் வந்தன.

அவரிடம் பேசுவதற்கு முன்புவரை  இன்னர் ஸ்பேஸ் (inner space) பற்றி நான் அறிந்திருக்கவில்லை. 40 நாட்களுக்கு தினமும் இரண்டு முறை  யோகா பயிற்சியை தொடர்ந்தேன். அற்புதமாக இருந்தது.

பின்னர் அடுத்தடுத்த பயிற்சியான ஹத யோகா, பவஸ்பதனா போன்ற கலைகளை கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் பற்றிய ஆழமான அனுபவ அறிவைப் பெறுவதற்கு யோகா சிறந்த வழி என்று நான் நம்புகிறேன்.

ஈஷா மையத்தில் ஈஷா சம்ஸ்கிருத கல்வி முறை மற்றும் அது மாணவர்களிடம் ஏற்படுத்தும் ஆழமான தாக்கம் எங்களை ஈர்த்தது. அதனால் எனது மகளையும் ஈஷா சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தேன்” என்று கூறியுள்ளார்.

தனது விண்வெளி ஆய்வுக்கு இந்த யோகா பயிற்சி வீரமுத்துவேலுக்கு உதவியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

ஆசிய விளையாட்டு: இந்திய கால்பந்து அணியில் 3 தமிழக வீராங்கனைகள்!

பாமக பொதுக்கூட்டம் : அனுமதி மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share