நிலவை நெருங்கும் சந்திரயான் 3

Published On:

| By Jegadeesh

Chandrayaan-3 Decreasing altitude

நிலவில் ஆய்வு நடத்த இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதையின் உயரம் 4 வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

100 கி.மீ உயரத்தில் உள்ள சந்திரயான் விண்கலம் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நிலவினை சுற்றி வருகிறது.

ADVERTISEMENT

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ சந்திரயான் – 3 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் கடந்த 5 ஆம் தேதி நுழைந்தது. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் முறையாகவும், 9 ஆம் தேதி இரண்டாம் முறையாகவும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி மூன்றாவது முறையாகவும் சந்திரயானின் உயரம் குறைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) நான்காவது முறையாக சந்திராயனின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இறுதிக் கட்டமாக சுற்றுவட்டப்பாதையின் உயரம் 153*163 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,  விண்கலத்தின் ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூலைப் பிரிப்பது ஆகஸ்ட் 17, 2023 அன்று  நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு காவல் துறையில் பணி!

ஆடி அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த பக்தர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share