பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பி.வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர்.
அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2′ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
லைகா புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (செப்டம்பர் 03) வெளியிட்டுள்ளது.
The moment we've all been waiting for is finally here! 🌸
The most awaited OFFICIAL TRAILER of Chandramukhi-2 is OUT NOW on YouTube! 🗡️🏇🏻🔥
Telugu Release By @Radhakrishnaen9 @SVR4446#Chandramukhi2 🗝️
🎬 #PVasu
🌟 @offl_Lawrence @KanganaTeam
🎶… pic.twitter.com/9L1mDddKui— Lyca Productions (@LycaProductions) September 3, 2023
முதல் பாகத்தில் தீய சக்தியின் அடையாளமாக புரியாத புதிராக சந்திரமுகியின் அறையில் இருந்த அணகோண்டா பாம்பு படம் முடியும் பொழுது வெளியேறும்.
அதே அணகோண்டா பாம்புடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. இப்படத்தில் அந்த பாம்புக்கு ஒரு பின்னணி இருக்கும் என்று உணர்த்துவதாக இருக்கிறது.
‘ராஜாதி ராஜ’ என்று தொடங்கும் கோரஸ் குரலுக்கு மத்தியில் லாரன்ஸின் அறிமுகம், தொடர்ந்து வடிவேலுவின் என்ட்ரி என வரிசையாக நடிகர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
முந்தைய பாகத்தைப் போல அல்லாமல் இதில் கங்கனா சந்திரமுகியாகவே அறிமுகமாகிறார். ராதிகா, ரவி மரியா, ஆர்.எஸ்.சிவாஜி, லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, விக்னேஷ் என பெரும் பட்டாளமே படத்தில் நடித்துள்ளதை அறிமுகம் செய்வதற்காகவே ஒவ்வொருவருக்கும் ஒரு ஷாட் ட்ரெய்லரில் வைத்திருக்கிறார்கள் என எண்ண தோன்றுகிறது.
படத்தின் திரைக்கதை, கதைகளம் என்ன என்பதை உணர்த்துவதாக ட்ரெய்லர் இல்லை.
இராமானுஜம்