ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக சந்திரகுமார் பதவியேற்பு!

Published On:

| By Selvam

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு, சபாநாயகர் அப்பாவு இன்று (பிப்ரவரி 10) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். பிப்ரவரி 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்கு எண்ணிகை நடைபெற்றது. Chandrakumar took oath MLA

சந்திரகுமார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீதாலட்சுமியை விட 91,558 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். சந்திரகுமார் 1,15,709 வாக்குகளும், சீதாலட்சுமி 24,151 வாக்குகளும் பெற்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அறையில், சந்திரகுமார் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சந்திரகுமாருக்கு அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்து வெற்றி சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Chandrakumar took oath MLA

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share