தல தோனியை பார்க்க அரிய வாய்ப்பு…நுழைவு கட்டணம் இல்லை!

Published On:

| By Minnambalam

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்க உள்ளது ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர்.

இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 -ம் தேதி நடக்கிறது.

ADVERTISEMENT

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான கவுண்டர் டிக்கெட் விற்பனை முடிவடைந்தது.

இந்நிலையில், சென்னை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று (மார்ச் 27 ) சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனை காண ரசிகர்களுக்கு கட்டணம் தேவை இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மைதானத்தில் சி, டி மற்றும் இ ஆகிய மூன்று கேலரிகளுக்கு மட்டும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சேப்பாக்கம் நோக்கி செல்கின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT
Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share