வரும் ஜூலை 16ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Chance of rain until July 16
தமிழகத்தில் மீண்டும் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் 2-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டியும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 41.0° செல்சியஸ் வெயிலும் குறைந்தபட்ச கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 22.6° செல்சியஸ் வெயிலும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிவிப்பில், “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் ஜூலை 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
10-07-2025 மற்றும் 11-07-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
10-07-2025 மற்றும் 11-07-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Chance of rain until July 16
