ADVERTISEMENT

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Rain

தமிழகத்தில் இன்று (நவம்பர் 24) சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பிற்பகல் 1மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடலில் நவம்பர் 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது; இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்து ‘சென்யார்’ புயலாக உருவாகக் கூடும்.
மேலும் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் குமரிக்கடல்- தென்மேற்கு வங்க கடலில் புயல் சின்னமான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

ADVERTISEMENT

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுரை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோல் கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது “என அறிவிக்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share