7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை அப்டேட்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கடலூர், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 12 செமீ, சேலத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.6 °செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 17.5 செல்சியஸும் வெயில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த 7 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (அக்டோபர் 6) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

06.10.2024 ஆம் தேதி முதல் 12.10.2024 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

கடும் கூட்டநெரிசல்: வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷனா இது… மும்பை ஸ்டேஷனுக்கே டஃப் கொடுக்கும் போலயே!

ஸ்தம்பித்த சென்னை : லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் விமான சாகச நிகழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share