குளு குளு செய்தி – 10 மாவட்டங்களில் கனமழை மேகங்கள்!

Published On:

| By indhu

Chance of heavy rain in 10 districts!

தமிழகத்தில் இன்று (மே 12) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

“இன்று (மே 12) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. – 50 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

நாளை (மே 13) முதல் மே 18ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ -40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனைத் தொடர்ந்து, நாளை (மே 13) தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

 

அதேப்போல், மே 14ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை முன்னறிவிப்பு

இன்று முதல் மே 16ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 40-41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-37 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்

இன்று (மே 12) முதல் மே 16ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60-85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 60-85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்ககூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐபிஎல் 2024: எந்தெந்த அணிக்கு எத்தனை புள்ளிகள்? CSK வின் சாய்ஸ் என்ன?

”அன்னையர் தினம்” – வாழ்த்திய அரசியல் தலைவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share