சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தங்களது இரு நிபந்தனைகளை ஏற்றால் இந்திய அணியின் போட்டிகளை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பமாட்டோம் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. மேலும் பிசிசிஐ சார்பில் இந்தியா ஆடும் ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நடத்த வேண்டும் என ஹைபிரிட் மாடலை முன் வைத்துள்ளது.
அதேவேளையில் சாம்பியன்ஸ் டிராபி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
இதற்கிடையே கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஐசிசி உறுப்பு நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பாகிஸ்தானை தவிர அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளுமே இந்தியா கூறியுள்ள ஹைபிரிட் மாடலுக்கு ஒத்துக்கொண்டனர் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகள் தாங்கள் மீண்டும் ஆலோசித்துவிட்டு முடிவெடுப்பதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டில் இருந்து பிசிபி பின்வாங்கியுள்ளது.
அதன்படி, பிசிசிஐ-யின் ஹைபிரிட் மாடலை ஏற்க தயார். ஆனால் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலக கோப்பை, 2031 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் அணியின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் நிபந்தனை வைத்துள்ளது.
இந்த நிபந்தனைகளை ஐசிசி ஏற்றுக்கொண்டால் மட்டுமே, சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்துவதை ஏற்றுக்கொள்வோம் என்று பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.
மேலும் ஹைபிரிட் மாடலை ஏற்க, பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் நிதி சுழற்சியை 5.75 சதவீதத்திலிருந்து அதிகரிக்க வேண்டும் என்று நக்வி வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’விஜய் வருகையால் பயமில்லை’ : லண்டனில் இருந்து திரும்பிய அண்ணாமலை பேட்டி!